You must be logged in to take this course → LOGIN | REGISTER NOW
1
21
ஆலிமாக்களுக்கு மிகவும் அவசியமான உளவியல் தீர்வு வழிமுறைகளை கற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் கற்ற கல்வியை சரியாக முன் வைக்க உங்களால் முடியுமாக இருக்கும்.
நவீன உளவியல் பாடநெறியை கற்று, உளவியல் சிகிச்சை முறைகளை அறிந்து கொள்வதன் ஊடாக அன்றாடம் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நவீன உளவியல் வழிமுறைகளின் ஊடாக கண்டுகொள்ள முடியும்.
கட்டணம் செலுத்தாமல் இப்பாடத்தை இலவசமாக கற்றுக் கொள்ள ஆலிமாக்கள் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.
சமூகப் பணிகளில் ஈடுபடும் உளவியல் துறையில் ஆர்வமுள்ள அனைத்து ஆலிமாக்களுக்குமான பாடநெறியாகும்.
இப்பாடநெறி ஆலிமாக்களை கருத்தில் கொண்டு மிகபொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------
- உளவியல் கற்கைகளை கற்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்?
- சமூகப் பணிகள் ஈடுபடும் போது பொருத்தமான தீர்வுகளை முன்வைக்கும் வழிமுறைகளை வீட்டில் இருந்தே கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் உள்ளவரா நீங்கள் ?
- அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகளை சரியாக இனம் கண்டு கொள்ள ஆர்வம் கொண்டவரா நீங்கள் ?
இதற்கு நீங்கள் ஒரு உளவள நிபுணராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஆலிமாக்களுக்கு மிகவும் அவசியமான உளவியல் தீர்வு வழிமுறைகளை கற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் கற்ற கல்வியை சரியாக முன் வைக்க ஆலிமாக்களாகிய உங்களால் முடியும்.
-------------------------------------------------
அறிமுகம்
நவீன உளவியல் என்ற இப்பாடநெறி உளவியல் சார்ந்த பொது அறிமுகத்தையும், சமூகத் தலைமையாக ஆலிமா அல்லது ஒரு உளவியலாளர் அவசியம் அறிந்திருக்க வேண்டிய உளவியல் தீர்வு வழிமுறைகள் மற்றும் ஆலிமாக்களின் வகிபாகம் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
நவீன உளவியல் கருத்தாக்கங்களை அறிந்து சிறந்த வெற்றிகரமான சமூகத் தலைவராக, ஆலிமாவாக மாறுவதற்கான அடிப்படை விடயங்கள் இங்கு கற்றுத் தரப்படும்.
-------------------------------------------------
பாடநெறியின் இலக்குகள்
நவீன உளவியல் அடிப்படைகள் மற்றும் தீர்வு வழிமுறைகளை அறிந்து கொள்வதன் ஊடாக உளவியல் துறையில் மேலும் கற்பதற்கு ஊக்குவித்தல்.
சமூகப் பணிகளில் ஈடுபடும் போது நவீன உளவியல் தீர்வு வழிமுறைகளை பயன்படுத்தி பொருத்தமான தீர்வுகளை வழங்க முடியுமான தலைமைத்துவமிக்க ஆலிமாக்களை உருவாக்குதல்.
-------------------------------------------------
குடும்ப நிறுவனத்தில் முக்கிய அங்கம் வகிப்பவரா நீங்கள்?
இப்பாடநெறி சமூகம் சார்ந்ததாக மாத்திரம் இருக்காமல் தனிமனித மாற்றம், குழந்தை வளர்ப்பு, குடும்ப வாழ்வியல், சமூக சீர்திருத்தம் போன்ற பல படித்தரங்களுக்கு தேவையான வழிகாட்டல்களை உள்ளடக்கியிருப்பதனால் உளவியல் தீர்வு வழிமுறைகள் தொடர்பான பூரணமான அறிவினை பெற்றுக் கொள்வதற்கு துணையாக அமையும்.
--------------------------------------------------
ஏன் ஆலிமாக்கள் இப்பாடநெறியை கற்க வேண்டும்?
- உரையாடல் திறனை வளர்த்துக் கொள்ள : புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும், பிறருடைய கருத்துக்களை அழகிய முறையில் ஒழுங்குபடுத்துவதற்கும் வழிகாட்டும்.
- உளவியல் புரிதல் : பிறர் மனநிலையைப் புரிந்துகொள்ளுவதன் மூலம், அவர்களின் உணர்வுகளைச் சரியாக புரிந்து பொருத்தமான தீர்வுகளை முன்வைக்க உதவும்.
- பிறர் நலம் பேனல் மற்றும் சுய கட்டுப்பாடு : உங்கள் உணர்வுகளை மற்றும் நடைமுறைகளைப் புரிந்து, சுய கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவும்.
- பிரச்சினைகளை சிறந்த முறையில் தீர்ப்பதற்கு : பிரச்சினைகளை மற்றும் குழப்பங்களை சீராக அணுகுவதற்கு தேவையான பகுப்பாய்வு திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும்.
- குடும்ப மற்றும் கூட்டு மனநிலையை சிறப்பாக பேணுவதற்கு : குடும்ப உறுப்பினர்களுடன் குறிப்பாகவும் பொதுவாக அனைவருடனும் நேர்மறையான உறவுகளை மேம்படுத்த உதவும் திறன்கள் கற்றுக்கொள்ளலாம், இது அனைவரின் மனநிலையைச் சிறப்பாக பேணி செயற்பட துணை நிற்கும்.
- சுய முன்னேற்றம் மற்றும் தலைமைத்து ஆற்றலை மேலும் வளர்த்துக் கொள்ள : தன்னையும், பிறரையும் ஊக்கப்படுத்தி, வழிகாட்ட உதவும் தலைமைத் திறன்களை வளர்க்க முடியும்.
--------------------------------------------------
பாடநெறி வடிவமைப்பாளர்
உளவியல் துறையில் பல பட்டப்படிப்புகளை நிறைவு செய்து பல நிறுவனங்களுடன் இணைந்து ஒரு தசாப்த காலத்திற்கு மேல் அனுபவத்துடன் விரிவுரையாளராகவும் உளவள ஆலோசகராகவும் பணியாற்றிய விரிவுரையாளரிடம் கற்றுக் கொள்வதற்கான ஒரு அரிய சந்தர்ப்பம்.
--------------------------------------------------
கற்பிக்கும் மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
--------------------------------------------------
பாடநெறியின் கால அளவு
3 மாதங்கள்
--------------------------------------------------
கட்டணம்
இலவசம்.
🎖சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிமாக்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்
உதவிகளுக்கு
+94778276706
Aalima Binth Abdul Razik
Course Currilcum
-
- Aalim.com அறிமுகம் 00:29:00
- வினாக்கள் 00:25:00
-
- Study Note – உளவியல் அறிமுகம் 00:10:00
- உளவியல் என்றால் என்ன? 00:29:00
- வினாக்கள் 00:25:00
- உளவியலை ஏன் கற்க வேண்டும் 01 00:30:00
- வினாக்கள் 00:20:00
- உளவியலை ஏன் கற்க வேண்டும் 02 00:05:00
- வினாக்கள் 00:20:00
- உளவியலை ஏன் கற்க வேண்டும் 03 00:23:00
- வினாக்கள் 00:20:00
- உளவியலை ஏன் கற்க வேண்டும் 04 00:17:00
- வினாக்கள் 00:15:00
- Study Note – அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) 00:10:00
- அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) 01 00:38:00
- வினாக்கள் 00:20:00
- அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) 02 00:12:00
- வினாக்கள் 00:20:00
- அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) 03 3 weeks, 3 days
- வினாக்கள் 00:15:00
- அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) 04 00:34:00
- வினாக்கள் 00:20:00
- அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) 05 00:40:00
- வினாக்கள் 00:20:00
- அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) 06 00:31:00
- வினாக்கள் 00:20:00
- அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) 07 00:37:00
- வினாக்கள் 00:20:00
- அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) 08 00:15:00
- வினாக்கள் 00:20:00
- தீர்வை மையமாகக் கொண்ட குறுகியகால சிகிச்சை (SFBT) 01 00:31:00
- வினாக்கள் 00:15:00
- தீர்வை மையமாகக் கொண்ட குறுகியகால சிகிச்சை (SFBT) 02 00:24:00
- வினாக்கள் 00:20:00
- தீர்வை மையமாகக் கொண்ட குறுகியகால சிகிச்சை (SFBT) 03 00:17:00
- வினாக்கள் 00:20:00
- தீர்வை மையமாகக் கொண்ட குறுகியகால சிகிச்சை (SFBT) 04 00:35:00
- வினாக்கள் 00:20:00
- தீர்வை மையமாகக் கொண்ட குறுகியகால சிகிச்சை (SFBT) 05 00:27:00
- வினாக்கள் 00:20:00
- தீர்வை மையமாகக் கொண்ட குறுகியகால சிகிச்சை (SFBT) 06 00:25:00
- வினாக்கள் 00:20:00
- தீர்வை மையமாகக் கொண்ட குறுகியகால சிகிச்சை (SFBT) 07 00:22:00
- வினாக்கள் 00:20:00
Course Reviews
5
- 5 stars1
- 4 stars0
- 3 stars0
- 2 stars0
- 1 stars0




இந்தப் பாடம் எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் இருந்தது dr.hajara உடைய இன்னும் சில course களை போட்டால் நல்லம்.