You must be logged in to take this course → LOGIN | REGISTER NOW
20
மன அமைதி, உணர்ச்சி சமநிலை மற்றும் உளநலத்தை மேம்படுத்தும் பயனுள்ள அறிவும் திறன்களும் இப்பாடநெறியின் மூலம் பெற முடியும்.
இப்பாடநெறி, மனஅழுத்தம் என்றால் என்ன, அது எவ்வாறு உருவாகிறது, அதன் அறிகுறிகள் என்ன என்பதனை எளிமையான முறையில் அறிமுகப்படுத்துகிறது. அன்றாட வாழ்க்கை, குடும்பப் பொறுப்புகள், கல்வி மற்றும் சமூகச் சூழல்களில் ஏற்படும் மனஅழுத்தங்களை இனங்கண்டு, அவற்றை ஆரோக்கியமான முறையில் கையாள்வதற்கான நடைமுறை உத்திகளை வழங்குகிறது. மன அமைதி, உணர்ச்சி சமநிலை மற்றும் உளநலத்தை மேம்படுத்தும் பயனுள்ள அறிவும் திறன்களும் இப்பாடநெறியின் மூலம் பெற முடியும்.
இப்பாடநெறி ஆலிமாக்களை கருத்தில் கொண்டு மிகப் பொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------
ஏன் ஆலிமாக்கள் இப்பாடநெறியை கற்க வேண்டும்?
- கல்வி, குடும்பம், சமூகப் பொறுப்புகள் மற்றும் தஃவா பணிகளால் ஏற்படும் மனஅழுத்தங்களை திறம்பட கையாள உதவுகிறது.
- உணர்ச்சிகளை சரியான முறையில் புரிந்து கொண்டு, மன அமைதியுடன் முடிவுகளை எடுக்கும் திறனை வளர்க்கிறது.
- மனநலத்தைப் பாதுகாத்து, ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
- பிறரின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் வழங்கும் திறனை மேம்படுத்துகிறது.
- ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நேர முகாமைத்துவம் மற்றும் மனஅழுத்தக் கட்டுப்பாட்டு நுட்பங்களை நடைமுறையில் பயன்படுத்தக் கற்றுத்தருகிறது.
- பொதுவாக பாடநெறிகளின் புள்ளிகள் பரீட்சை முறை மூலம் வழங்கப்படும். ஆனால், எமது பாடநெறியில் ஆலிமாக்களுக்கு பொருத்தமான முறையை அவதானித்து பல மதிப்பீட்டு முறைகள் கட்டம் கட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- கற்பிக்கும் மொழி
- ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
---------------------------------------------------
பாடநெறி விரிவுரையாளர்
Shakira Mansoor
Licensed psychological counselor, MSW (Mental Health)B.A (Hons)Dip in clinical psychotheraphy ,Dip in counselling , Islamic psychology & sex counseling, CBT &NLP Practitioner
-------------------------------------------------
பாடநெறியின் கால அளவு
- வாராந்தம் 4–6 மணித்தியாலங்கள் நேர ஒதுக்கீடு (Zoom and Online)
- முழுமையாக 8 மணித்தியாலங்கள் வகுப்புகள் நடைபெறும்.
- முழுமையாக நிறைவு செய்த ஆலிமாக்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
--------------------------------------------------
கட்டணம்
இலவசம்.
--------------------------------------------------
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிமாக்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
--------------------------------------------------
உதவிகளுக்கு
+94 77 816 6706
Aalim.com Ladies Division



